2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஹெராய்ன் வழக்கு: ஐவருக்கு மரண தண்டனை

Editorial   / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

152 கிலோ கிராம் ஹெராய்ன் போதைப்பொருளை  டோலர் படகின் மூலமாக இலங்கைக்குக் கொண்டு வந்துக்கொண்டிருந்த போது, கடற்படையினரால் நடுகடலில் வைத்து கைப்பற்றப்பட்ட மீனவர்கள் ஐவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலல்லே மரண்ட தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முறைப்பாட்டாளரினால் எவ்விதமான சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என தீர்மானித்துள்ள நீதிபதி, பிரதிவாதிகளின் இந்த செயற்பாட்டால் சமூகத்தில் ஏற்படும் ஆபத்தான நிலை​மையை கருத்தில் கொண்டு பிரதிவாதிகளுக்கு இவ்வாறு தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.  

2019 நவம்பர் 2ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் இலங்கைக்கு அண்மையில், இலங்கையினை அடையாளப்படுத்தும் கடல் எல்லையில், 152.34 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தனர். விற்பனைக்கு மற்றும் சூழ்ச்சி செய்தமை ஆகியவற்றின் கீழ், பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X