Editorial / 2026 மே 10 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி. கபில
சுமார் 4 கோடியே 77 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான (Hashish) போதைப்பொருள் தொகையை இலங்கைக்குக் கடத்தி வந்து, அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை பயணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (10) அன்று அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விற்பனை உதவியாளர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை (10) அன்று அதிகாலை 12:30 மணியளவில் தாய்லாந்தின் பெங்காக் நகரிலிருந்து தாய் ஏர்வேஸ் (Thai Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பொதியைச் சோதனையிட்டபோது, அதில் 'சொக்லேட்' எனப் பெயரிடப்பட்ட 15 பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 778 கிராம் எடையுடைய ஹஷீஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.




29 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
30 minute ago