Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 பெப்ரவரி 10 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிஜாப் விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணி கபில் சிபல் மனுதாக்கல் செய்த நிலையில், அவசர விசாரணைக்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் ஒரு கல்லூரி, ஹிஜாப் அணிந்து வர மாணவிகளுக்கு தடைவிதித்தது. இதை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனால் மற்றொரு பிரிவு மாணவிகள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.
இதனால் மாணவ- மாணவிகள் சீருடைகள் அணிய கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தற்போது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க இருக்கிறது.
இதற்கிடையே கர்நாடக மாநிலம் முழுவதும் ஹிஜாப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கல்லூரிக்கு வெளியே இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பல மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து சொல்ல தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், மூத்த வழக்கறிஞரான கபில் சிபல், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல்லெறி சம்பவங்கள் நடைபெறுகின்றன. கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் உள்ள ஹிஜாப் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், இந்த மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் ஏன் தலையிட வேண்டும். எந்தவொரு குறிப்பிட்ட திகதியும் ஒதுக்க முடியாது என மறுத்துள்ளது.
13 minute ago
28 minute ago
46 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
46 minute ago
50 minute ago