Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஜூன் 30 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும், தெரு நாடகம் நடத்தி பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 15 பேருக்கு எதிரான விசாரணை தொடர்பாக டிசம்பர் 8 ஆம் திகதி சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு திங்கட்கிழமை (30) உத்தரவிட்டார்.
ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு, விசாரணைகள் முடிந்துவிட்டதாகவும், சாரம்சம் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிருணிகா பிரேமச்சந்திர, சாந்தனி குசுமலதா மற்றும் சண்டருவானி ரோட்ரிக், நயனா நிலாந்தி, மனுநாத ஜெயவீர, சிரோமணி பியதர்ஷனி, நிருபா ஐரங்கனி, நிருபா அது கோரல ஒய். தனுஷிகா, புஷ்பா ரஞ்சனி, தினுஷா தீப்தி, அனுராதா ரஜினி, ஷ்ரியா குமாரி, தக்ஷி, எஸ். லலிதா, தக்ஷி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் ஒரு தெரு நாடகத்தில் சந்தேக நபர்கள் 2022 ஆண்டு ஈடுபட்டிருந்தனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பிரதம நீதவான், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago