Editorial / 2017 நவம்பர் 24 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெமட்டகொட பிரதேசத்தில், இளைஞன் ஒருவரை கடத்தி, தாக்குதல் நடத்தி, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அறுவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில், விசாரிக்கப்பட்ட மேற்படி வழக்கின் தீர்ப்பு, நீதிபதி ஆர். குணசிங்ஹவினால் இன்று (24) வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை தவிர அவருடைய மெய் பாதுகாவலர்களான எட்டுபேரில் ஆறுபேருக்கே, இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த அறுபேருக்கும் 12 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எட்டாவது சந்தேகநபர் 18 வயதுக்கும் குறைந்த பாடசாலை மாணவன் என்பதனால், அவருக்கு கடுமையான எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இரண்டாவது சந்தேகநபர், அரச ஊழியர் என்பதனால், அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவில்லை.
2 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago