Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 29 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமதோரு அமரஜீவ)
திருகோணமலை, மகாமாயாபுர சந்தியில் மது போதையில் கலவரம் செய்தோர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதான பொலிஸார், இராணுவத்தினர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் மதுபோதையில் கலவரம் செய்த ஐவர், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர், இரு இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 10 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, மகாமாயாபுர சந்தியில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் மது போதையிலுள்ள சிலர் கலவரம் செய்வதாக பொலிஸ் அவசர அழைப்பான 119க்கு கிடைத்த தகவலை அடுத்து அவ்விடத்துக்குச் சென்றுள்ள பொலிஸார் போதையிலுள்ளவர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் நிலைமை மோசமானதை அடுத்து இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்தை அடுத்து போதையில் கலவரம் செய்த மேலும் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் மேற்படி பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025