2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் டிசம்பர் 11ஆம் முதலமைச்சரினால் சமர்ப்பிப்பு

Super User   / 2012 டிசெம்பர் 06 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

இரண்டாவது கிழக்கு மாகாண சபையின் தடவையாக முதலாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் டபிள்யூ.ஜி.எம்.ஆரியவதி கலப்பதி தலைமையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதின் வரவு செலவு திட்ட வாசிப்பை தொடர்ந்து ஆளுநர் செயலகம், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, மாகாண பேரவை  செயலகம் போன்றவற்றிற்கான குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.

இதன் பின்னர் முதலமைச்சரின் அமைச்சிற்கான குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும், வாக்கெடுப்பும் டிசம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .