2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கூட்டுறவு சங்க சட்டம் உருவாக்கப்பட்டு 100 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கலந்துரையாடல்

Super User   / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசீம்)     

கூட்டுறவு சங்க சட்டம் இலங்கையில் உருவாக்கப்பட்டு 100 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கிழக்கு மாகாண கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களும் பொது முகாமையாளர்கள் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குமான கலந்துரையாடல் இன்று செவ்வாயக்கிழமை கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எம்.சி.எம்.ஷெரீப் தலைமையில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் 100 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு இவ்வாண்டு கொண்டாடப்படும் சர்வதேச கூட்டுறவு தின விழாவினை வெகுசிறப்பாக கொண்டாடும் முகமாகவும், இவ்விழாவினை மாகாண மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் சிறப்பாக கொண்டாடும் முகமாக கூட்டுறவு சங்கங்களும் திணைக்களமும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆணையாளரினால் விளக்கமளிக்கப்பட்டது.

இதில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எஸ். சிவகுருநாதன், திருகோணமலை மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் எஸ்.ராஐன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X