2025 ஜூலை 02, புதன்கிழமை

கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு யூ.எஸ்.எயிட் 1.5 மில்லியன் உதவி

Super User   / 2011 மே 22 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

 

அண்மையில் கிழக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்காக சமாதானத்திற்கான உணவு திட்டத்தின் கீழ் யூ.எஸ்.எயிட் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுதியான உதவி வழங்குவதற்கு கைச்சாத்திட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக அமெரிக்க அரசின் உதவி நிறுவனமான யு.எஸ்எயிட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உட்கட்டமைப்புக்களை திருத்த உதவும்.

கடந்த பெப்ரவரி மாதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்காக உலக உணவுத் திட்டத்தின் ஊடாக வழங்கிய 416,300 அமெரிக்க டொலர்களையும் இந்த புதிய ஒப்பந்தம் நிறைவுசெய்யும்.

இதற்கு மேலதிகமாக, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 40,000 கிழக்கு மாகாண விவசாயிகளின் வாழ்வாதரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக அமெரிக்க வெளிநாட்டு அனர்த்த உதவி காரியாலயம் யு.எஸ்எயிட் ஊடாக 800,000 அமெரிக்க டொலர்களை அண்மையில் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக யு.எஸ்எயிட் ஊடாக அமெரிக்க அரசு சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .