2025 மே 15, வியாழக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழுவின் மூதூர் அமர்வில் 201 பேர் சாட்சியம்

Super User   / 2010 டிசெம்பர் 04 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 3.25மணி வரை இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வில் 201 பேர் சாட்சியமளித்துள்ளனர்.

இன்றைய அமர்வின் போது 93 சாட்சியங்கள் காணாமல் போனோர் தொடர்பிலும் 60 சாட்சியங்கள் தடுப்பு காவலி;ல் உள்ளேர் தொடர்பிலும் 19 சாட்சியங்கள் கடத்தி செல்லப்பட்டோர் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 29 சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் மேற்கொள்ளவிருந்த சம்பூர் பகுதிக்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .