2025 மே 12, திங்கட்கிழமை

குச்சவெளி, கந்தளாய் பிரதேச அபிவிருத்திக்கு 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Super User   / 2011 ஜூலை 12 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி மற்றும் கந்தளாய் பிரதேச அபிவிருத்திக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் கோரிக்கைக்கிணங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்நிதியின் ஊடாக குச்சவெளி அந்நூரியா மகா வித்தியாலய விளையாட்டு மைதானம் திருத்த வேளைக்கு 4.4 மிலல்லியன் ரூபாவும் இக்பால் நகர் விளையாட்டு மைதானத்திற்கு 4.4 மில்லியன் ரூபாவும் உட்கட்டமைப்பு கொங்கீறிட் வீதி அபிவிருத்திக்கு 4.4 மில்லியன் ரூபாவும், நிலாவெளி மையவாடி வீதி கொங்கீறிட் இடுதலுக்கு 4.4 மில்லியன் ரூபாவும் இறக்கக்கண்டி உள் வீதிகளின் புனரமைப்புக்கு 4.4. மில்லியன் ரூபாவும் புல்மோட்டை மையவாடி வீதி 2 மில்லியன் ரூபாவும், கந்தளாய் முஸ்லிம் மையவாடி சுற்று மதில் அமைத்தல் ஒரு மில்லியன் ரூபாவாவுமாக மொத்தம் 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X