2025 மே 15, வியாழக்கிழமை

மூதூரில் அரிசி தட்டுப்பாட்டை நீக்க 50 அரிசி மூடைகளை அனுப்பிவைப்பு

Super User   / 2011 பெப்ரவரி 05 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டை நீக்குவதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் 50 அரிசி மூடைகளை அனுப்பிவைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அ.நடராசா தெரிவித்தார்.

கடற் படையினரின் விசேட கப்பல் மூலம் இன்று சனிக்கிழமை மாலை அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு தொகுதி அரிசி மூடைகள் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் அ.நடராசா மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .