2025 மே 14, புதன்கிழமை

பசு, மானை கொன்ற 4 பொலிஸார் உட்பட 9 பேர் கைது

Super User   / 2011 மார்ச் 09 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம், எம்.பரீட்)

கிண்ணியா கண்டல் காட்டு பகுதியில் இரண்டு பசு மாடுகளையும் மான் ஒன்றினையும் சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு பொலிஸாரும் ஐந்து பொதுமக்களும் ரி-56 துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கண்டல் காட்டுப்பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட கடமைக்காக திருமலை பொலிஸ் நிலையத்திலிருந்து வந்த ஒருவரும், மூதூர் பொலிஸ் நிலையத்திலிருந்து வந்த மூவருமே கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .