2025 மே 13, செவ்வாய்க்கிழமை

புதையல் தோண்ட முற்பட்ட 8பேர் கைது

Menaka Mookandi   / 2011 ஜூன் 28 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ)

திருகோணமலை, கோமரன்கடவல பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து திருவுருவச் சிலையொன்று உட்பட பூசைப் பொருட்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கோமரன்கடவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலுத்கம பிரதேச வீட்டுத் தோட்டமொன்றில் கிணறு தோண்டுவது போல் மேற்படி புதையல் தோண்டும் முயற்சி முன்னெடுக்கப்படுவதாக பொலிஸாருக்கு இன்று பிற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் மேற்படி வீட்டுத் தோட்டத்தின் உரிமையாளர் தவிர்ந்த அனைவரும் வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் கந்தளாய், பதவியா, பதுளை, மதவாச்சி மற்றும் திரம்பனை போன்ற பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ளனர் என்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் கோமரன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளை அடுத்து அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X