2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா பிரதேச அபிவிருத்திக்காக 10 கோடி ரூபா ஒதுக்கீடு

Super User   / 2011 ஜூலை 03 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக், எம்.பரீட்)

கிண்ணியா நகர சபை பிரதேசத்தில் இவ் வருடத்திற்கான 'நெல்சிப'; திட்டத்;தை அமுல்படுத்துவதற்கான கொத்தணி குழுத் தெரிவும் விழிப்புணர்வு செயலமர்வும் இன்று காலை நகர சபை முதல்வர் எம்.எம்.ஹில்மி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது எகுத்தார் நகர், மாலிந்துறை, பெரிய கிண்ணியா, பெரியாற்று ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கான 'நெல்சிப்' விழிப்புணர்வு குழு தெரிவு செய்யப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ் கிண்ணியா நகரசபை பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு 10 கோடியே 21 இலட்சம் ரூபா ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டலடி ஊற்றில் மீன் விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் இனம் காணப்பட்ட பாரிய அளவிலான வடிகாண்களை நிர்மாணிப்பதற்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் இக் கூட்டத்தில் தவிசாளர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X