2025 மே 10, சனிக்கிழமை

வெள்ளம் காரணமாக 150 குடும்பங்கள் மேட்டு நில பகுதியில் தஞ்சம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(பரீத், கியாஸ் ஷாபி, முறாசில்)

கிண்ணியா பிரதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக பூவரசந்தீவு, சமாவச்சத்தீவு, கண்டல் காடு, கிராண் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளம் காரணமாக கண்டல்காடு, கிரான் ஆகிய கிராமங்களில் வசித்து வந்த 150 குடும்பங்கள் சின்னக்கிரான் என்ற இடத்தில் உள்ள மேட்டு நிலமொனறில்; தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் 1200க்கும்அதிகமான ஏக்கர் நெற் காணிகள் பாதிக்கப்படடுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடை செய்யக்கூடிய நிலையில் இருந்த கண்ணடல்காடு, தீனேரி, கல்லடிவெட்டுவான், கிரான் மற்றும் பூவரசந்தீவு ஆகிய பிரதேச வயல் நிலங்களே இவ்வாறு பாதிக்கட்டுள்ளன.
 
இப்பிரதேசத்தில் ஆறடிக்கு மேல் வெள்ளம் பாய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இப்பிரதேசங்களுக்கான சகல தரைவழிப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மூதூர் வேதத்தீவு கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கி நிர்க்கதியான 45 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

வேதத்தீவு ஆற்றில் நீர் பெருக்கெடுத்தைத் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கிய இம்மக்களை படகுகளின் மூலம் மீட்கும் நடவடிக்கையில் பொதுமக்களின் உதவியுடன் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

மூதூர் பிரதேச சபைத் தலைவர் ஏ.எம்.ஹரீஸ், மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன் உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த இடத்திற்கு நேரில் சென்று நிர்க்;கதியான மக்களை மீட்கும் செயற்பாட்டிற்கு உதவினர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X