2025 மே 06, செவ்வாய்க்கிழமை

திரியாயில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 28 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன், கஜன்)

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செலாளர் பிரிவின் கீழ் வரும் மீளக்குடியமர்த்தப்பட்ட திரியாய் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தையான ச.மகாலிங்கம் (வயது 48) உயிரிழந்தார் என்று குச்சவெளிபொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர் வீட்டுக்கதவை திறந்து வெளியே இயற்கைக்கடன் கழிக்க வெளியே வந்தபோது வளவில் இருளில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியதாகவும் அவர் இந்த இடத்திலேயே உயிரிழந்தததாகவும் சொல்லப்படுகிறது.

திரியாய்க் கிராமத்தில் மக்கள் மீளக்குடியமர்ந்த பிறகு இதுவரை இவ்வாண்டில் காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மரணத்துடன் 17ஆக அதிகரித்துள்ளதாக திருகோணமலை மாவட்டத்தின் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்னசிங்கம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X