Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 23 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார், பரீட்)
'ஈஸ்ற் எக்ஸ்போ 2011' கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி கிராமிய உற்பத்தி கடற்தொழில் அமைச்சினால் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்துகொண்டதுடன், கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, அமைச்சர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாணசபை தவிசாளர் எச்.எம்.பாயிஸ், பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி, மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் சுமார் 500 காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முப்படையினரின் யுத்த தளபாடங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. விமானப்படையினர் இலகுரக விமானங்கள். உலங்கு வானூர்திகள் என்பனவற்றையும் கடற்படையினர் ஆயுத படகுகளையும் காட்சிக்கு வைத்துள்ளனர்.
பெருமளவிலான விவசாய உபகரணங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
THIVAAN Saturday, 24 September 2011 02:04 AM
கிழக்கு மாகான கால்நடை, கிராமிய , கடல்தொழில் அமைச்சு, இதுக்கும் இராணுவ உபகரணத்துக்கும் என்ன சம்பந்தம்? இதை
யாரிடம் போய் சொல்ல?
Reply : 0 0
Thamiz Thursday, 29 September 2011 03:36 AM
நான் அறிந்தவகையில் இது ஒரு விவசாயமோ, கால்நடையோ, கைத்தொழிலோ, மீன்பிடி சார்ந்ததோ அல்ல.இது ஒரு வர்த்தக கண்காட்சியாகும்.
கண்காட்சியின் கருப்பொருளினை நன்கு அறிந்து கருத்துகளை தெரிவிப்பதே சாலவும் சிறந்தது !!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago