2025 மே 14, புதன்கிழமை

வெள்ள அனர்த்தம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 28,370 ஏக்கர் வயல்கள் பாதிப்பு

Super User   / 2011 பெப்ரவரி 08 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 28,370 ஏக்கர் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் பிரதி பணிப்பாளர் உகநாதன் தெரிவித்தார்.

மரக்கறி செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதி பணிப்பாளர் மண்ணில் உள்ள ஈரத்திற்கு ஏற்றவாறு உடனடி விவசாய செய்கையை மேற்கொள்வதற்கு  வீட்டுத் தோட்டத்தில் ஈடுபடவைக்க தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பட்டார்.

மக்களுக்கு வீட்டுத் தோட்டத்திற்காக விதை வகைகைளை  வழங்க உள்ளதாகவும், இவற்றை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் விவசாய போதனாசிரியர்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .