2025 மே 14, புதன்கிழமை

கிண்ணியாவில் 3 ஜீ இன்டர்நெட் இணைப்பு வசதி ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 30 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தின்; கிண்ணியா பிரதேசத்தில் 3ஜீ இன்டர்நெட் இணைப்பு வசதியை ஏற்படுத்தித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் தொலைத்தொடர்புகள் அனைத்திலும் 3 ஜீ இணைப்பு (கவரேஜ்) இல்லாததால், இப்பிரதேச பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், திணைக்களங்கள் பொது அமைப்புக்கள் போன்றன இன்டர்நெட், ஈமெயில் வசதிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கிண்ணியாப் பிரதேசத்தில் டயலொக், எயார்டெல், மொபிடல், ஹட்ஜ் மற்றும் எடிசலாட் போன்ற பல்வேறு டவர்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வாடிக்கையாளர்களாக ஏராளமானோர் உள்ளனர்;. இத் டவர்களில் அனேகமான இடங்களில் ஜி.எஸ்.எம். இணைப்பு வசதிகள் மட்டுமே உள்ளதால் திருகோணமலை, மூதூர் போன்ற தூர இடங்களிலிருந்து வரும் காற்றலை இணைப்புகள் மூலமே இங்கு ஓரளவேயினும் இவ் வசதி கிடைக்கப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
எனவே இப்பிரச்சினைகளைச் சீர் செய்து மக்கள் சாதாரனமாக 3ஜீ பெற்றுக் கொள்வதற்கான வசதியினை செய்து தருமாறு இது தொடர்பான உயர் அதிகாரிகளிடம் வேண்டிக்கொள்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .