2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கோமரன்கடவெல அபிவிருத்திக்கு ரூ.3.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 23 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.பரீட்)

கிழக்கு மாகாணத்தில் 'சிறு நீர்ப்பாசன குளங்களை அண்டியதான பயிர்ச்செய்கை மூலம் சமுதாய அபிவிருத்தி' எனும் திட்டத்திற்கு திருகோணமலை கோமரன்கடவெல பிரதேசம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
 
கோமரன்கடவெல பிரதேசத்தில் ஒடிச்ச குளத்தை அண்மித்த பயிர்ச்செய்கை நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்த வேலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

இதற்கென ரூபா 32 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இப்பிரதேசத்திற்கு நேரடியாக இன்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடித்துறை அமைச்சர் கௌரவ கலாநிதி துரையப்பா நவரட்ணராஜா தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 100 ஏக்கர் பயிர் செய்கை காணியில் விவசாயம் செய்யமுடியும் எனவும் இதனோடு விசேடமாக இப்பிரதேசத்தில் அதிகமான பழமரச்செய்கையினையும் ஊக்குவிக்கமுடியும் எனத்தெரிவித்தார்.

மேலும் இதே போன்று இம்மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களிலும் ஒரு பிரதேசசெயலாளர் பிரிவு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் என் செந்தீபன் பிரதி விவசாய பணிப்பாளர் பி உகனதாசன விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X