2025 மே 15, வியாழக்கிழமை

வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 324,556 பேர் பாதிப்பு

Super User   / 2011 பெப்ரவரி 07 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து செல்லும் அகதிகளின் தொகை மேலும் அதிகரித்து செல்கின்றன.

இம்மாவட்டத்தில் தற்போது 176 நலன்புரி முகாம்களில் 21,220 குடும்பங்களை சேர்ந்த 78,510 பேரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் 65,971 குடும்பங்களை சேர்ந்த 246,045 பேரும் தஞ்சமடைந்திருப்பதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரீ.ரீஆர்.டீ.சில்வா தெரிவித்தார்.

மாவட்டத்தின் கிண்ணியா, தம்பலகாமம், மூதூர், குச்சவெளி, சேருவல, போன்ற பகுதிகளிலுள்ள பல கிராமங்கள் நீரில் முழ்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ள அனர்த்தம் காரணமாக மூதூர் பிரதேசத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் கடைகள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .