2025 மே 10, சனிக்கிழமை

திருமலையில் இந்திய மீனவர்கள் 37 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படும்  இந்திய மீனவர்கள்   37 பேரை கடற்படையினர் இன்று திங்கட்கிழமை காலை கைதுசெய்துள்ளனர்.

திருகோணமலை, புல்மோட்டை  கடல் பகுதிக்கு அப்பாலேயே  மேற்படி மீனவர்கள் 5 ரோலர் படகுகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இவர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.    

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X