2025 மே 15, வியாழக்கிழமை

மழையால் இடம்பெயர்ந்த 390 குடும்பங்கள் 18 நலன்புரி நிலையங்களில் தங்கவைப்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 03 , மு.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்த 390 குடும்பங்களைச் சேர்ந்த 1282 பேர் 18 நிவாரண நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ அதிகாரி எம்.முகாஜிரின் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் வெருகல், பதவிசிரிபுர, தம்பலகாமம், குச்சவெளி, கொமரங்கடவெல, கிண்ணியா, மூதூர் போன்;ற பகுதிகள் வெள்ளத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கிண்ணியா மின்னேரிக்குளம், பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரம் ஆகியன பெருக்கெடுத்துள்ளதால் வெருகல் பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெருகல் ஊடாக மட்டக்களப்பு வரையிலான தரை வழிப்பாதையும் மூதூர் கிண்ணியாவுக்கான தரை வழிப்பாதையும்  முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .