Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 21 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
'இவ் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் 450 கிலோ மீற்றர் வீதி கொங்கிறீட் வீதியாக் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் ஆண்டு பதினொராயிரத்து நூறு மில்லியன் ரூபாய் செலவில் 750 கிலோ மீற்றர் வீதி கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளதாக' கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வீதி அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர், எம்.எஸ்.உதுமாலெப்பை இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களைவ விட முன் உதாரணமாக திகழ்கின்றது. ஏனெனில், கடந்த 30 வருட யுத்தத்திலிருந்து ஜனாதிபதியின் முயற்சியினால் இம் மாகாணம் விடுவிக்கப்பட்டு தற்போது பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை கிழக்கு பெற்று வருகின்றது என தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
janoovar Saturday, 24 December 2011 04:05 AM
ஒரு மத்திய அமைச்சர் கூட செய்ய முடியாத சேவைகளை அமைச்சர் நீங்கள் செய்து வருகின்றீர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
39 minute ago
49 minute ago
2 hours ago