2025 மே 15, வியாழக்கிழமை

திருகோணமலையில் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் 485 முறைப்பாடுகள்

Super User   / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயத்தின் போது 485 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

117 முறைப்பாடுகள் கடத்தல் தொடர்பாகவும் 186 முறைப்பாடுகள் காணாமல் போனோர் தொடர்பாகவும் 124 முறைப்பாடுகள் கைதிகள் தொடர்பாகவும் 58 ஏனைய விடயங்கள் தொடர்பான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் குச்சவெளி அமர்வின் போது மாத்திரம் ஒருவர் இரகசியமாக சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை கடும் மழை காரணமாகவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சம்பூர் விஜயம் ரத்துச்செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .