2025 மே 07, புதன்கிழமை

சிறுவர் தினத்தை முன்னிட்டு 5000 மாத்திரை உறைகள் வெளியீடு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 30 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கியாஸ் ஷாபி)
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிண்ணியா முஸ்லிம் மகளீர் மகா வித்தியாலய மாணவிகளால் தயாரிக்கப்பட்ட 5000 மாத்திரை உறைகள் இன்று வெள்ளிக்கிழமை கிண்ணியா தள வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு  அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இதனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எச்.எம்.சமீம் வித்தியாலய அதிபர் ஏ.ஜே.றூமியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடவிதானத்தில் வரும் எம்மால் செய்யக்கூடிய மாற்றம்; என்ற செயற்றிட்டத்துக்கு இனங்க கழிவு கடதாசிகளைக் கொண்டு இம்மாணவிகள் இதனைத் தயாரித்துள்ளனர்.

எம்.எப்.எம்.பர்ஸானா, எம்.ரீ.நளீரா, எ.எச்.சுமையா மற்றும் எம்.சன்பரா ஆகிய வகுப்பாசிரியர்களின் வழிகாட்டலின் கீழ்  இச் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X