2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணத்தின் புனரமைப்பு பணிகளுக்கு 550 மில்லியன் ரூபா நிதி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)
 
கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வீதிகள்,  குளங்கள்,  நீர்ப்பாசன வீதிகள் ஆகியவற்றை புனரமைப்பதற்காக 550 மில்லியன் ரூபாய்வை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வழங்கியுள்ளது.  

இது பற்றி ஆராயும் விசேட கூட்டமொன்று கிழக்கு மாகாண  வீதி அபிவிருத்தி நீர்பாசனம்,  நிர்மாணம், கிராமிய மின்சாரம் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் அவரது அமைச்சு  கலந்துரையாடல் மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திட்டப் பணிப்பாளர் எஸ்.கே.லியனகே மற்றும் அதிகாரிகளுடன் கிழக்கு  மாகாண அமைச்சின்  வீதி  அபிவிருத்தி திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் என்பனவற்றின்  மாகாண பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள் என பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இவ்வருடத்தில் இத்திட்டத்திற்கு அமைவாக  திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்கு தலா 150 மில்லியன் ரூபாவும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 250 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X