2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

திருமலையில் மான்கள் இனம் அழியும் சாத்தியம்

Menaka Mookandi   / 2011 ஜூலை 27 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ)

திருகோணமலை கோட்டையை அண்டியுள்ள பிரதேசங்களில் வாழும் மான்கள் பொதுமக்களின் அசாதாரண நடவடிக்கைகள் காரணமாக வெகுவாக அழிவடைந்து வரும் நிலைமை தற்போது தோன்றியுள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் திருமலை மாவட்ட அலுவலகம் தெரிவித்தது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்துக்கான உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், அவர்களால் எறியப்படும் பொலித்தீன் உறைகளை உட்கொள்வதாலேயே மான்கள் உயிரிழப்பதாக மேற்படி அலுவலகம் கூறியது.

மான்களின் பாதுகாப்பு நிமிர்த்தம் உல்லாசப் பயணிகளினால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளடங்கிய பதாதைகள் பல்வேறு இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த போதிலும் அவை குறித்து அவர்கள் கவனத்திற்கொள்வதில்லை என்று வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் திருமலை மாவட்ட அலுவலகம் மேலும் குறிப்பிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X