Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சஹரீன் எம்.இஸ்மத்
திருகோணமலை, சம்பூர் பிரதேசத்;தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள குடும்பங்களில் அரசாங்க ஊழியர்களைச் சேர்ந்த குடும்பங்கள் அடிப்படை உதவிகளில் புறக்கணிக்கப்படுவதுடன், ஏனையோருக்கான அடிப்படை உதவிகளைச் செய்துகொடுப்பதிலும் தாமதம் காணப்படுவதாக கிழக்கு மகாணசபை உறுப்பினர் கே.நாகேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதமும் இவ்வருடம் மார்ச் மாதமும் 2 கட்டங்களாக சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ளன. இப்பிரதேசத்தில் இதுவரையில் 906 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன. முதற்கட்டமாக செப்டெம்பர் மாதம் மீள்குடியேற்றப்பட்ட 360 குடும்பங்களில் 36 குடும்பங்கள் அரசாங்க ஊழியர்களைச் சேர்ந்தவர்களாவர். இரண்டாம் கட்டமாக மீள்குடியேற்றப்பட்ட 546 குடும்பங்களில் 80 குடும்பங்கள் அரசாங்க ஊழியர்களைச் சேர்ந்தவர்களாவர்.
இவ்வாறிருக்க, சம்பூர் பிரதேச மக்கள் நிரந்தர வீடுகளின்றி சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 145 பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டம், பல வருடங்களாகியும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை.
2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் 51ஃ2 இலட்;சம் ரூபாய் மதிப்பிடப்பட்டிருந்தது.
தற்போதைய விலையேற்றம் காரணமாக வீடொன்றை அமைக்க 71ஃ2 இலட்சம் ரூபாய் ஆகக்குறைந்தது தேவையாகுமென்ற காரணத்தால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் இந்திய வீட்டுத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்கள்.
சம்பூர் மீள்குடியேற்றத்தில், வாழ்வாதார முறைகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. இந்த வாழ்வாதார உதவி முறையில் ஒழுங்குமுறைகள் சரியாகப் பின்பற்றபடவில்லை. ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதாரங்கள் இந்த மக்களுக்கு வழங்கப்பட்டபோதும் பொருத்தமான முறையில் வழங்கப்படவில்லை. மிகக் குறைந்த தொகையினருக்கே வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
14 minute ago
1 hours ago
28 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
28 Jul 2025