Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், எப்.முபாரக்
உரிய அனுமதி கிடைத்ததும் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுகப்படுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மூன்றம்சக் கோரிக்கையை முன்வைத்து அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகள் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக நேற்று புதன்கிழமை ஆரம்பித்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை தொடர்கின்றது. இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
'பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கவேண்டும், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வேலை வழங்கவேண்டும், அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளே முன்வைத்தே இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், 'கிழக்கு மாகாணத்தில் அனைத்துத் துறைகளிலும் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நியமனம் வழங்குவதற்கான அனுமதியும் கோரப்பட்டுள்ளது. எனவே, உரிய அனுமதி கிடைத்ததும் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
கடந்த காலத்தில் வழங்கப்பட்ட நியமனங்களில் பல்வேறு சூழ்;ச்சிகளுடன் குறைபாடுகள் இருந்தமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பல்வேறு தரப்பிப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அக்குற்றச்சாட்டுகள் தற்பொழுது நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026