2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'அரசாங்கத்தின் மீது நம்பிக்கை குறைகிறது'

Thipaan   / 2016 நவம்பர் 03 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

தற்போதைய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டபோது, தமிழ் மக்களுக்கு இருந்த நம்பிக்கை, தற்போது குறைவடைந்து செல்கிறது என்பதனை இங்கு வந்திருந்த குழுவினருக்குச் சுட்டிக்காட்டினோம். அரசியல் தீர்வு முயற்சிகளிலே ஒருவித மந்த நிலமைகள் காணப்படுகின்றன என்பதனை அவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம் என, கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்துக்கு நேற்று விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவைச் சந்தித்த பின், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த வருடம், புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டபோதும், அதன்பின்னர் நடந்த தேர்தலில், அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டபோதும் மக்களுக்கு இருந்த அந்தப் மிகப்பெரிய தற்போது குறைவடைந்து செல்கிறது. ஆகவே, தமிழ் மக்களின் நம்பிக்கையைக் கட்டி எழுப்பும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்.

குறிப்பாக நடைபெறவுள்ள அரசியல் தீர்வுமுயற்சியில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் மிக கவனமாக உள்வாங்கப்பட வேண்டும் என்ற விடயத்தையும் இச்சந்திப்பில் வலியுறுத்தினோம்.

ஜி.எஸ்.பி வரிச்சலுகையை கொடுக்கும் பொழுது, அரசாங்கத்துக்குத் தேவையான நிபந்தனைகளை, தமிழ் மக்களுடைய, தமிழ் பேசும் மக்களுடைய, அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற வகையிலான  நிபந்தனைகளையும் ஆலோசனைகளையும் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்பதனை நாம் வலியுறுத்தியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .