Niroshini / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
திருகோணமலை மாவட்ட நகர் புற பாடசாலைகளில் திங்கட்கிழமை(12) தொடக்கம் ஆசிரியர்களின் வரவு நேரத்தைக் கண்காணிக்க கல்வித் திணைக்களத்திலிருந்து அலுவலர்கள் வருகை தருவதாக கிழக்கிலங்கை தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். ஜெயராஜா தெரிவித்தார்.
தினமும் பாடசாலைகளுக்கு வருகை தரும் கல்வித் திணைக்கள அலுவலர் ஒருவர் ஆசிரியர்களின் தினப்பதிவேடு வைக்கப்பட்டுள்ள மேசைக்கு முன்னால் அமர்ந்திருந்து ஆசிரியர்கள் கையொப்பமிடும்போது நேரத்தை நோட்டமிட்டு குறிப்பெடுத்துக் கொள்கின்றார்.
இந்த நடைமுறை அடுத்து வரும் இரு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் அதிபர்களுக்கு அறிவித்துள்ளனர் என்றார்.
மேலும்,இதனை விட இலத்திரனியல் நேரப் பதிவு முறையை கல்வித் திணைக்களம் அமுல்படுத்துமாயின் அது அசௌகரியங்களையும் மன உளைச்சலையும் தவிர்க்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago