Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜூலை 30 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், ஏ.எம்.ஏ. பரீட், ஒலுமுதீன் கியாஸ்,-பைஷல் இஸ்மாயில்,எம் எஸ் அப்துல் ஹலீம்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறைகள் அதிகரித்து வருவதால், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.
திருகோணமலை, புல்மோட்டை மத்திய கல்லூரியின் விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடம் நேற்று வெள்ளிக்கிழமை (29) வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
திருகோணமலை மாவட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பாக மாகாண சபையில் அடிக்கடி பிரேரணை முன்வைத்து பேசி, கல்வி அமைச்சர் மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளோடு முரண்படுவதில், எந்தத் தனிநபர் முரண்பாடுகளும் கிடையாது.
பிரதேச பாடசாலைகளின் தேவைகளை நிறைவேற்றும்படி கோரியதை அமைச்சர் ஒருபோதும் முரண்பாடாகக் கருதமாட்டார். அத்துடன், எதிர்வரும் ஒருசில மாதங்களுக்குள் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டிப ;பரீட்சையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்காக சுமார் 1,134 பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளீர்க்கப்பட்டு நியமிக்கப்பட உள்ளனர்.
குறித்த நியமனத்தின் போது குச்சவெளி கோட்டம், அவ்வாறே மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளுக்கும் நியமிக்கபடவுள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், எமது பிரதேசத்தில் குறைந்த வளங்களைக் கொண்டு க.பொ.தா (சா ஃத) மற்றும் உயர்தரம், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை போன்றவற்றில் நல்ல பெறுபேறுகளை மாவட்ட ரீதியில் பெற்றுள்ளார்கள்.
தொடர்ந்து ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதனூடாக, மாகாண மற்றும் தேசிய ரீதியில் சாதனை படைக்கக்கூடிய மாணவர்கள் எமது மாணவர்கள், அதனால் எமது மாவட்டத்தையும் மாகாணத்தையும் கல்வியில் உயர்த்த ஏதுவாக இருக்கும்.
புல்மோட்டைப் பிரதேசம் கல்வியில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இது எப்போதும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிள்ளைகளின் கல்வியிலும் பெற்றோர்களின் கவனம் அமைய வேண்டும்' என்றார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி மீள்குடியேற்ற அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், குச்சவெளி பிரதேச சபையின் முன்னால் பிரதி தவிசாளர் ஏ.பி.தௌபீக், குச்சவெளி பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர்களான எச்.எம்.சல்மான் பாரிஸ், எம்.ஐ.பதுறுத்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் என்.விஜேந்திரன், குச்சவெளி கோட்டக் கல்விப் பணிப்பாளர் செல்வநாயகம் உட்பட பாடசாலை அதிபர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago