2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 மே 02 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அவ்வித்தியாலய மாணவர்களும் பெற்றோரும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தபோது, '253 மாணவர்கள் கல்வி பயின்று வரும் இந்த வித்தியாலயத்தில்  7 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வித்தியாலயத்துக்கு  இன்னும் 9 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையே இந்த வித்தியாலயத்தில் நிலவுகின்றது.

இது தொடர்பில்  பல தடவைகள் கல்வி உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும், எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .