2025 மே 15, வியாழக்கிழமை

'ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும்'

Suganthini Ratnam   / 2017 மே 16 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா, முள்ளிப்பொத்தானைக் கல்விக் கோட்டத்தில்  அமைந்துள்ள சிறாஜ் இசுறு கலவன் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப்பாடசாலை மாணவர்கள் இன்று பாடசாலைக்குச் சமூகமளிக்காமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இந்தப் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப்பாடசாலை மாணவர்களும் பழைய மாணவர்களும் பெற்றோரும் திங்கட்கிழமை (15)   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

539  மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் 16 ஆசிரியர்கள் மாத்திரமே  உள்ளனர் என்பதுடன், இன்னும் 20  ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் எனவும் மாணவர்கள் கூறினர்.

இப்பாடசாலையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ்  ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது எனவும் அம்மாணவர்கள் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .