Niroshini / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
ஆரம்ப வகுப்புகளிலுள்ள கற்றல் இடர்பாடுகள் மற்றும் நடத்தைக் குறைபாடுகள் கொண்ட மாணவர்களை இனங்காணல் தொடர்பாக திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட தமிழ் மொழிமூலமான ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கான செயலமர்வு அனுராதபுரச்சந்தி ஆசிரியர் வளநிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
ஆரம்பக்கல்வி உதவிபணிப்பாளர் சு.கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் எழுத்து மயக்க குறைபாடு,அவதானக் குறைபாடு,மதியிறுக்கம் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடு போன்ற விடயங்கள் குறித்து பயற்சிகள் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாண சமுதாய மருத்துவ ஆலோசனை நிபுணர் வைத்தியர் அருட்குமரன்,குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியர் இ.இரட்னரஞ்ஜித ஆகியோர் வளவாளராக கலந்துகொண்டனர்.
இதில் வலயக்கல்விப்பணிப்பாளர் ந.விஜேந்திரன்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி செயலமர்வில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதல்களை வழங்கி வைத்தனர்.

9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026