Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 25 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
'எமது மக்களின் இழப்பீடுகளை பூர்த்தி செய்யுமளவுக்கு பொருளாதாரம் நெருக்கடியாக உள்ளது. இருப்பினும், நாம் அதனை செய்யவே முயற்சிக்கின்றோம்' இவ்வாறு புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்து அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
மேலும், தாம்; அமைக்கும் வீடுகளுக்கு இன்றைய நவீன யுகத்துக்கு ஏற்ற வகையில் எரிவாயு தொலைபேசி இணைய வசதிகளை கொடுப்பதில் தவறில்லை. ஏனெனில், இன்றைய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டு சிங்கப்பூரை போல மாற்ற வேண்டும் என்பதே ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய விருப்பமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் கடற்படை முகாம் இருந்த 177 ஏக்கர் காணியை இரண்டாவது கட்டமாக உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'சம்பூர் தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்கள் ஜனாதிபதி மற்றும் பிரமருடன் இடம்பெற்றபோது, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு பேசுவார். அவ்வாறு போராடி இன்று சம்பூரை அந்த மண்ணுக்குரிய மக்களிடமே கொண்டுவந்து சேர்த்துவிட்டார்கள்' என்றார்.
'மேலும், 30 ஆண்டுகால யுத்தத்தில் பலர் தமது உறவுகளையும் உடமைகளையும் இழந்தவர்களாக காணப்படுகின்றனர்' எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago