2025 மே 19, திங்கட்கிழமை

'எனது தந்தையின் சேவைகளைவிடவும் அதிகமாகச் செய்வேன்'

Thipaan   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

'திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில், எனது தந்தையான எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன செய்த சேவைகளை விடவும் நான் அதிகமாகச் செய்வேன் என, மறைந்த முன்னாள் காணி அமைச்சரின் புதல்வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சேருவிலத் தொகுதி அமைப்பாளருமான நளின் குணவர்த்தன தெரிவித்தார்.

கந்தளாய் ஜனத்தா மாவத்தையில் நேற்று புதன்கிழமை (03) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

சேருவிலத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வசமாக உள்ளது. இதனை எந்தக் கட்சியாலும் பிரிக்கவோ, வாக்குகளை சிதறடிக்கவோ முடியாது. எனது தந்தை கட்டிக்காத்து வந்த தேர்தல் தொகுதியாகும் அபிவிருத்தில் எந்த விதமான பாகுபாடுகளும் இன்றி செயலாற்றியவர் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் வாழுகின்ற பிரதேசமாகும் எந்தவிதமான பாகுபாடுகளும், வேறுபாடுகளும் இன்றி மக்களை தம்வசம் வைத்திருந்தவர்.

அவரின் கனவுகளை நான் கடைபிடிக்க வேண்டும், எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு நாம் தயாராக வேண்டும் மேலும் சேருவில தொகுதியே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அதிகூடுதலான வாக்குகளைப் பெற்ற தேர்தல் தொகுதியாகும்.

அந்த வெற்றித் தொகுதியை பின்னடைவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க கூடாது அனைவரும் அனைத்து பகுதிகளிலும் களமிறங்கி செயற்பட வேண்டும்' என்றார்.

இந்நிகழ்வில், கந்தளாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X