2025 மே 16, வெள்ளிக்கிழமை

குச்சவெளியில் 1,000 பேருக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 26 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புல்மோட்டைப் பிரதேசத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம்  வட்டாரங்களில் வாழ்ந்துவரும் ஆயிரம் பேருக்கு குடியிருப்புக் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் நேற்று (25) வழங்கி வைக்கப்பட்டன.

புல்மோட்டை அரபா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, இவர்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்களை கிழக்கு மாகாணக் காணி அமைச்சர்  ஆரியவதி கலப்பதி வழங்கி வைத்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  ஆட்சிக்காலத்தில் புல்மோட்டையில்; புனித பூமிக்காக சுமார் 3,000 ஏக்கர் காணிகள் அளவிட முற்பட்ட வேளையில் தான் உட்படப் பிரதேச அரசியல் பிரமுகர்கள்,  பள்ளிவாசல் தலைவர், பொதுமக்கள் எனப்  போராட்டத்தில் ஈடுபட்டு அளவீட்டைத் தடுத்து நிறுத்தியதாகவும் அக்காணிகளுக்கும் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.

மேலும், இப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புடவைக்கட்டு, திரியாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த  இரண்டாயிரம் பேருக்கு குடியிருப்புக் காணிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .