2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா டி.பி ஜாயா மாணவிகள் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

தமது பாடசாலைக்குத் தேவையான அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தருமாறு கோரி திருகோணமலை, கிண்ணியா டி.பி ஜாயா மகளிர் வித்தியாலய மாணவிகள் இன்று திங்கட்கிழமை காலை கிண்ணியா பிரதான வீதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை சுமார் 22 வருட காலமாக ஏற்கனவே நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபையின் களஞ்சியசாலையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய தற்காலிக கொட்டில்களில் இயங்கி வருகின்றது.

மழை காலங்களில் இக்கொட்டில்களிலிருந்து நீர் வடிவதனால் மாணவர்கள் குடைகளை ஏந்தியவாரே கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலைக்குத் தேவையான கட்டட வசதி, தளபாட வசதி,நூலக வசதி, விஞ்ஞான ஆய்வுக் கூட வசதி போன்ற எதுவித அடிப்படை வசதிகளும் பூரணமாக இல்லாத நிலையில் இப்பாடசாலை இதுவரை காலமும் இயங்கி வருகின்றது.

மேலும், இப்பாடசாலைக்கு அருகாமையில் கிண்ணியா தள வைத்தியசாலையும் அமையப்பெற்றுள்ளதனால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இப்பாடசாலையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டதன் விளைவாக அருகாமையில் புதிய காணி பெறப்பட்டு புதிய கட்டடங்கள் அரசினால் அமைத்துத் தரப்பட்ட போதிலும், மாணவிகள் அனைவரையும் அங்கு கொண்டு சென்று கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அக்கட்டட வசதிகள் போதுமானதாக இல்லை.

குறிப்பிட்ட வகுப்புக்களை மாத்திரம் அந்த இடத்துக்கு கொண்டு சென்று கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு இரு இடங்களில் ஒரு பாடசாலை மாணவர்கள் பிரிந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதனால் நிருவாக விடயங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தரம் 11 வரையிலுள்ள இப்பாடசாலையில் சுமார்  700 மாணவிகள்  கல்வி பயின்று வருவதுடன் 28 ஆசிரியர்கள் சேவையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .