2025 மே 16, வெள்ளிக்கிழமை

'கிண்ணியாவில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரிப்பு'

Niroshini   / 2017 மார்ச் 05 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

“கிண்ணியா   சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த இரண்டு - மூன்று வாரங்களில் 500க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நால்வர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.அஜீத் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேச ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த நான்கு தினங்களாக, டெங்கு நுளம்புகள்  பெருக்கூடிய இடங்களை கண்டு அழிப்பதற்கான செயற்பாடுகளில் தினமும் ஈடுபட்டுவருகின்றோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் மத்திய சுகாதார அமைச்சுகளிடமிருந்தும் மாகாண சுகாதார அமைச்சுகளிலிருந்தும் ஆலோசனைகளும் உதவிகளும் கிடைக்கப்பெறுகின்றன.

இதேவேளை, பிற மாவட்டங்களான பொலன்னறுவை, மட்டக்களப்பு, கல்முனை,  அம்பாறை ஆகிய பகுதிகளிலிருந்து வெளிக்கள உத்தியோகத்தர்களைத் தந்து டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த மேலும்  ஆக்கபூர்வமான செயற்பாட்டில் சிறந்த வழிகாட்டியாக இருந்து உதவி வருகின்றனர்.

இது தொடர்பாக இப்பிரதேச மக்களுக்கு பல வழிகளிலும் விழிப்புணர்வை தொடர்ந்தும் ஏற்படுத்தி வருகின்றோம்.
ஆனால், கடந்த இரண்டு - மூன்று நாட்களாக இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கும் ஆளாகியுள்ளோம்.

எனவே, இப்பிரதேச மக்கள் இதில் பூரண ஒத்துழைப்பை வழங்கும் பட்சத்தில் வெகு விரைவில் இப் பிரதேசத்தில் டெங்கு தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்” என்றார்.

கிழக்கு மாகாண சமூக நல வைத்திய நிபுணர் டொக்டர் அருன் குமார் கருத்துத் தெரிவிக்கையில்,

“கிண்ணியாவில் இது  வரை டெங்கு காய்ச்சலால் நான்கு பேர்கள் உயிழந்துள்ளதுடன், 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.

கிண்ணியா தள வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை காரணமாக கொழும்பில் இருந்து வைத்திய நிபுணர்களையும் அதிகாரிகளும்  வைத்திய குழுக்களையும் அழைத்து வந்து இம்மக்களுக்கு உதவி வருகிறோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .