Niroshini / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செய்ற்பாட்டுக் குழு திருகோணமலையில் நடத்திய கையெழுத்து வேட்டை போராட்டத்தில் பொலிஸாரின் தலையீடு எமக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இது தொடர்ந்து இன்று தொடக்கம் ஒரு வார காலத்துக்கு தொடர்ந்து நடத்தப்படும் என அக்குழுவின் செய்ற்பாட்டாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
திருகோணமலை சிவன்கோயில் முன்றலில் நேற்று திங்கட்கிழமை இந்த கையெழுத்து வேட்டை போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்த பொலிஸார் பொதுமக்களை பலவந்தப்படுத்தி கையெழுத்து திரட்டப்படுவதாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இதனை நிறுத்துமாறும் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வருமாறும் அழைத்தனர்.
இதனையடுத்து, பொலிஸ் நிலையத்துக்கு சென்ற போது தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்மிடம் தங்களுக்கு இவ்வாறான முறைப்பாடு கிடைத்துள்ளதால் விசாரணைக்கு அழைத்ததாக குறிப்பட்டார். இதனை நீங்கள் செய்யும் முன்னர் எங்களுக்கு தகவல் தந்திருக்கலாம்.
நீங்கள் அமைதியாக தொடர்ச்சியாக இதனை மேற்கொளள்லாம். பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் இதனை தொடர்ந்து முன்னெடுக்கலாம் அதற்கு நாம் தடையாக இருக்க மாட்டோம் என்று குறிப்பிட்டார்.
இதற்கு அமைவாக நாம் இன்று செவ்வாய்கிழமை மாலை 3.00 மணி தொடக்கம் ஒரு வார காலத்துக்கு கையெழுத்து வேட்டை போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
இதேவேளை, தம்பலகாமம்,மூதூர் போன்ற பகுதிகளிலும் எமது செயற்பாட்டாளர்கள் அங்குள்ள பொது மக்களிடம் கையெழுத்துக்களை சேகரிக்கவுள்ளார்கள் என்றார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026