2025 மே 16, வெள்ளிக்கிழமை

9 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Thipaan   / 2017 மார்ச் 10 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

முல்லைத்தீவில் இருந்து, திருகோணமலைக்கு பஸ்ஸில் கொண்டுவரப்பட்ட 9 கிலோ கிராம் கேரள கஞ்சா, கன்னியா பகுதியில் வைத்து இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது என்று, உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்  இவர் இலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவின் பிராந்திய துர்நடத்தை ஒழிப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலை அடுத்தே குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .