Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியாஸ் ஆதம்
கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள கல்வி சாரா ஊழியர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்படும் போது, ஏனைய மாகாணங்களில் அமுல்படுத்தப்படும் பதவிப் பெயர்களை கிழக்கு மாகாண கல்வி சாரா ஊழியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென, கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் 62ஆவது சபை அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் இன்று வியாழக்கிழமை (25) நடைபெற்றது.
இதன் போது, கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள கல்வி சாரா ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது பதவிப் பெயர்களில் மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள கிழக்கு மாகாண ஆளுநரையும் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவையும் கோரும்; அவசர பிரரேனையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் பாடசாலை பணியாளர் தரம்-III நியமனம் வழங்கப்பட்டு 10 வருட சேவையினை நிறைவு செய்தவர்களுக்கு தரம்-II பாடசாலைப் பணியாளர்கள் என்ற பதவிப் பெயருடன் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது.
பாடசாலைப் பணியாளர் தரம் II பதவியில் 09 வருட கால சேவையினை நிறைவு செய்தவர்களுக்கு பாடசாலைப் பணியாளர் தரம்-ஐ என்ற பதவிப் பெயருடன் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. பாடசாலை பணியாளர் தரம் II பதவியில்; 09 வருட சேவை காலத்தினை நிறைவு செய்தவர்களுக்கு விஷேட தரம் என்ற பதவி உயர்வு பாடசாலை பணியாளர் என்ற பதவிப் பெயருடன் வழங்கப்பட்டுவருகின்றது.
கிழக்கு மாகாணப் பாடசாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்ட போதும் அவர்களுக்கான பதவியின் பெயர் மாற்றம் செய்யப்படாமல் பாடசாலை பணியாளர் என்ற பெயரில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசாங்க கல்வி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் தேசியப் பாடசாலைகள், மேல் மாகாண, சப்ரகமுவ மாகாண, ஊவா மாகாண , வடமேல் மாகாண பாடசாலைகளில் பாடசாலைப் பணியாளர் தரம்-III என்ற நியமனம் வழங்கப்பட்டு 10 வருட சேவையை நிறைவு செய்தவர்களுக்கு தரம்-II பதவி உயர்வு வழங்கப்பட்டு அவர்களின் பதவிகளில்; பாடசாலை ஆய்வு கூட உதவியாளர், பாடசாலை நூலக உதவியாளர், பாடசாலை அலுவலக உதவியாளர், பாடசாலை காவலாளி என்ற பதவிப் பெயர்களுடன் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் பாடசாலைப் பணியாளராக பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது மேலுள்ள பதவிப் பெயர்களில் பதவி உயர்வு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநரையும், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினையும் கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடுக்க வேண்டும் என்றார்.
20 minute ago
26 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
47 minute ago
1 hours ago