2025 மே 23, வெள்ளிக்கிழமை

'கிழக்கு மாகாண வர்த்தகர்களின் பிரச்சினைகள் வெளிக்கொண்டு வரப்படும்'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 28 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக், வடமாலை ராஜ்குமார்                      

கிழக்கு மாகாணத்திலுள்ள வர்த்தகர்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு மாகாண வர்த்தகச் சம்மேளனத்தின் தலைவர் கே.குலதீபன் தெரிவித்தார்.                                     

மேலும், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தகர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு, ஒன்றிணைந்து முடிவெடுத்தே கிழக்கு மாகாண வர்த்தக சம்மேளனத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண வர்த்தகச் சம்மேளன அங்குரார்ப்பண நிகழ்வுக்கான ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல், இன்று திங்கட்கிழமை திருகோணமலை ஜேக்கப்; பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாணத்தில் வர்த்தகர்கள், ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்டோர்; பல்வேறு வழிகளில் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். வெளிமாகாணத்திலிருந்து வருகை தந்து தொழில்களை மேற்கொள்வது மற்றும் வெளியார்கள் ஒப்பந்தங்களை மேற்கொள்வது உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றோம்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X