2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

'கராத்தே பயிற்சி இம் மண்ணுக்கு புதிதானதல்ல'

Niroshini   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கராத்தேப் பயிற்சி என்பது இம் மண்ணுக்கு புதிதானதொன்றல்ல. கடந்த 1947ஆம் ஆண்டுக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இயற்கைத்துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் சீனர்களுடைய வருகை, அவர்களுடைய தேவைப்பாடுகள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காணப்பட்டது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகருப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் கராட்டி பயிற்சிக்கு புதிய  மாணவர்கள் அனுமதியும் பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரி மகருப் மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறியதாவது,

திருகோணமலை சீனக்குடாவில் 101 எண்ணெய்த் தாங்கிகளை அமைப்பதற்காக சீனர்களுடைய தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த வேளையில், திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை, மூதூர், கிண்ணியா, தோப்பூர் போன்ற சூழவுள்ள பிரதேசங்களிலிருந்து அந்த தாங்கி வேலைகளுக்காக பலர் செல்வார்கள்,

அந்த நேரங்களிலேயே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சீனர்கள் இவர்களுக்கு பயிற்சியளிப்பார்கள், அதில் ஆர்வலாளர்களாக கிண்ணியா மண்ணில் இருந்தவர்கள் கலந்துகொள்வார்கள்.

அந்த நேரத்திலேயே சீனடி என்ற ஒரு விடயம் எமது மண்ணுக்கு உட்பிரவேசித்தது. இன்று ஒரு பலமிக்கவர்களாக பயற்சியில் ஆர்வமிக்கவராக அதனை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தார்கள்.

பின்னர் காலத்துக்கு காலம் இம் மண்ணில் சீனடி மாற்ற மறைந்து நவீன முறைக்கு கடந்த 1970ஆம் ஆண்டு வரை ஒரு கட்டாயமான பயிற்சியாக ஒவ்வொரு வீட்டிலும் இருந்துவந்தது.

தற்டபோது 45- 50 வருடங்களாக இப் பயிற்சி இம் மண்ணை விட்டு தூரமாக்கப்பட்டுள்ளது. அதிலும் 25 வருடங்கள் பொய்யான விளையாட்டை விளையாடியுள்ளனர்.

அட்டாளைச்சேனை பலாலி போன்ற ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆசிரியர்கள் எல்லாம் பெய்யாகவே விளையாடுவார்கள்.இதன் பின்னர்தான் கராட்டி எம் மண்ணுக்கு வருகை தந்துள்ளது என்றார்.

மேலும்,இச் சங்கத்துக்கு என்னால் எவ்வளவு உதவ முடியுமோ அந்த அளவுக்கு உதவிசெய்வதுடன் இந்த நிதி ஒதுக்கீட்டிலிருந்த இந்த பயிற்சி மாணவர்களுக்கு பயிற்சி உடைகளை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .