2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'சுயதொழிலில் அதிக முன்னேற்றம் காணப்படுகிறது'

Thipaan   / 2016 ஜூன் 26 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

 

அரச தொழிலை விடவும் சுயதொழிலில் அதிகமாக முன்னேற்றம் காணப்படுகின்றது. சுய தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் சமூக சேவை திணைக்களத்துக்கு வருகை தருமாறு, கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் என். மணிவண்ணன், நேற்று (25) தெரிவித்தார்.

செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 17ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பொதுக்கூட்டமும் திருகோணமலை, மட்டிக்களியில் நேற்று (25) நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

சுயதொழில் செய்வதற்காக 30,000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும் அதனை பெற்றுக்கொள்ள பிரதேச செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் சென்று அங்கு வழங்கப்படுகின்ற ஆவணங்களை பூர்த்தி செய்து அதனை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

டி. பாலசுப்பரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் என். மதிவண்ணன், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X