2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

12 சாராயப் போத்தல்களை வைத்திருந்தவர் கைது

Thipaan   / 2016 ஜூன் 20 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை கந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் பராக்கிரமபாகு மாவத்தையிலுள்ள பலசரக்குக் கடையில், 12 சாராயப் போத்தல்களை வைத்திருந்த 38 வயது நபரொருவர், கந்தளாய் தலைமையக சிறுகுற்றத் தடுப்பு பொலிஸாரால், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், அனுமதிப்பத்திரமில்லாமல் சாராயம் வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்தநபரின் பலசரக்குக் கடையை சோதனைக்குட்படுத்திய போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த சாராய போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக கந்தளாய் தலைமையக சிறுகுற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கந்தளாய் தலைமையக சிறுகுற்றத் தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .