Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜூலை 25 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
சிறைக்கைதிகளின் நலன் கருதி, அக்கறையோடு செயற்பட்டு வரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் விளையாட்டுத் திறனும் வெளிக்கொணரப்பட வேண்டும் என திருகோணமலை சிறைச்சாலையின் அதிகாரி பிரசாத் ஹேமந்த தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் தினத்தினை முன்னிட்டு, சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று, திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இலங்கையில் எவ்வளோ விளையாட்டுக்களும் விளையாட்டு வீரர்களும் இருக்கின்றனர்;. இருந்தபோதிலும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு தேசிய ரீதியில் சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவது குறைவாகும்.
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எப்போதும் சிறைக்கைதிகளைத் தான் பராமரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும். அவர்களுக்கான முக்கியத்துவங்கள் பகிரப்பட வேண்டும்.
தற்போதய கால கட்டத்தில் நாளுக்கு நாள், மரண தண்டனைகளும் ஆயுள் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், ஒவ்வொரு கைதிகளும் கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம், திருட்டு மற்றும் போதைப் பொருள் பாவனை போன்ற செயற்பாடுகளுடன் தொடர்புபட்டே சிறைக்கு வருகின்றனர்.
அவர்களைத் திருத்தி, புனர்வாழ்வளித்து, வெளிச்செல்லும் காலம் வரை அவர்களுக்கான நலன்புரித் திட்டங்களை மேற்கொள்வது கடினமான காரியமாகும். அந்த உத்தியோகத்தர்களின் மனதினை ஒரு நிலைப்படுத்த விளையாட்டுத் துறைகள் இன்றியமையாதவையாகும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .